புகைப்படக் கவிதை - 11

 

தூணுக்கு நீ துணையா?
தூண் உனக்குத் துணையா?
கண்களில் ஆயிரம் கனவுகள்
முகத்தில் ஆயிரம் பாவங்கள்
ஏனோ நெஞ்சில் குறுகுறுப்பு
அதன் எச்சமோ சோகமாய்
இன்னும் என்ன இழப்பதற்கு
ஒன்றுமில்லை இனி எனக்கு
என்றிங்கே எண்ண வேண்டாம்
எதிர்காலம் என்று உண்டு
அதன் துவக்கம் இன்றே
இதோ இப்போதே இங்கேயே!