புகைப்படக் கவிதை - 1

 

இது, தாங்கும் கரமா?
இல்லை தவிர்க்கும் கரமா?

இங்கே, கீழிருப்பவரை மேலே தூக்குகிறார்களா?
இல்லை மேலிருப்பவரை கீழே இழுக்கிறார்களா?

இது, வாழும் வரை நீடிக்குமா?
இல்லை இப்போதே பிரிந்திடுமா?

இங்கே காதல் பரிமாறப்படுமா?
இல்லை சாதலுக்கு வழிகாட்டுமா?

இது ஆதரவுக்கா?
இல்லை நிராதரவுக்கா?